உடுமலை தாமரை அம்மன் கோவிலில் வரும் 6ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2019 01:06
உடுமலை:உடுமலை மடத்துக்குளம் கிருஷ்ணாபுரம் சர்க்கரை மில் அருகில் தாமரை அம்மன், சுந்தர்ராஜ பெருமாள் கோவில், செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப் பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா விநாயகர் வழிபாட்டுடன் நேற்று (ஜூன்., 3ல்) துவங்கியது. விழாவில் இன்று (ஜூன்., 4ல்) மாலை, புண்யாக வாசனை, வாஸ்து சாந்தி, முளைப்பாலிகை இடுதலும் நடக்கிறது. நாளை (ஜூன்., 5ல்) மாலை 6:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், லலிதா சகஸ்ரநாமம் பாராயணமும் நடக்கவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி காலை, 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், தசதரிசனம் நடக்கிறது.