பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
11:06
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்ம தீர்த்தக் குளம் துாய்மைபடுத்தும் பணி முடிவடைந்து தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரர் கோவில், பரிகார ஸ்தலமாக விளங்குவதால், தினசரி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், நீராடிய பிறகே சனீஸ்வரரை வழிபட செல்வார்கள். இதற்காக கோவிலை சுற்றி நளம் குளம், சரஸ்வதி குளம் மற்றும் பிரம்ம தீர்த்தக்குளம் ஆகிய மூன்று குளங்கள் உள்ளது. இந்த மூன்று தீர்த்தங்களை கோவில் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டுவரகிறது.
தற்போது, பிரம்ம தீர்த்தக் குளத்தை புனரைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது. அதில், குளத்தை சுற்று கான்கிரீட் சுவர், புதிதாக படிக்கட்டுகள், மண்டபம் மற்றும் குளத்தை சுற்றிலும் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததையொட்டி, நடைபெறவுள்ள பிரம்மோற்சவ விழாவில் தெப்பல் உற்சவம் நடத்தும் பொருட்டு, பிரம்ம தீர்த்த குளத்தில் தண்ணீர் நீரப்பும் பணி நடைபெற்று வருகிறது.