பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
12:06
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அடுத்த, பென்னலூர் பேட்டை அருகே, வெலமகண்டிகை கிராமத்தில் உள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், வைகாசி மாதம் நடைபெறும், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா சிறப்பு வாய்ந்தது.
இந்தாண்டு, இவ்விழா, 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், (ஜூன்., 4ல்)தீமிதி திருவிழா நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.பின், உற்சவர் வீர ஆஞ்நேயர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.