கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை ஜும்மா பள்ளி வாசலில், ரம்ஜான் திருநாள் விழா கொண்டாட்டம் நடந்தது. முத்தவல்லி அப்துல் லத்தீப் தலைமை வகித்தார். பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை செய்த பின், ரம்ஜான் திருநாளின் சிறப்புகள் பற்றி, இமாம் மவுலவி ஜபருல்லாஹ் சொற்பொழிவாற்றினார். விழாவில், முஸ்லீம்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி இனிப்பு வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். விழாவில், பள்ளிவாசல் செயலாளர் அமானுல்லா, பொருளாளர் நிஜாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.