பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
01:06
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில், நேற்று 5ல், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த, பள்ளப்பட்டியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகள். வியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமாக நாட்டின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் உள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான்
திருநாளன்று, தங்களது சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு வந்து உறவினர்களுடன் சேர்ந்து, ரம்ஜான் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, ரம்ஜான் திருநாளான
நேற்று 5ல்,, பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில், 7,000 பேருக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.