திருப்பரங்குன்றம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2019 01:06
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
மூன்று நாட்களாக நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று (ஜூன்., 6ல்)காலை பூர்த்தி செய்யப்பட்டு கோபுர கலத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின் மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது.மேலூர்பதினெட்டாங்குடி பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன. மூன்றாம் நாளான நேற்று (ஜூன்., 6ல்)காலை கும்பாபிஷேகம் நடந்தது. மூவாயிரம் பேர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.