பதிவு செய்த நாள்
10
ஜூன்
2019
01:06
விக்கிரவாண்டி:வி.நல்லாளம் கிராமத்தில் மூன்று கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த வி.நல்லாளம் கிராமத்தில் உள்ள விநாயகர், முத்து மாரியம்மன், பிடாரி அம்மன் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 9ல்) நடந்தது.
அதையொட்டி கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் (ஜூன்., 8ல்) காலை கணபதி பூஜை, நவகிரக பூஜை, மகா தீபாராதனை நடந்தது.நேற்று (ஜூன்., 9ல்)இரண்டாம் கால யாக சாலை பூஜை துவங்கியது. கோ பூஜை,
திரவிய ஹோமம், சங்கல்பம் மற்றும் மகா தீபாராதனை, யாத்ராதானம் முடிந்து, கடம் புறப்பாடாகி மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வந்தது.காலை
9.10 மணிக்கு விநாயகர் கோவில் தொடர்ந்து பிடாரி அம்மன் கோவில் மற்றும் 9.50 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம்
நடந்தது.பெரியதச்சூர், கொத்தமங்கலம், பேரணி, நாகந்தூர், வயலாமூர் வி. பாஞ்சாலம், விக்கிரவாண்டி உள்ளிட்ட கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.மாலையில் அம்மனுக்கு
திருக்கல்யாண உற்சவம், வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடும்பத்தினர் செய்திருந்தனர்.