பதிவு செய்த நாள்
10
ஜூன்
2019
01:06
தேவரியம்பாக்கம்:கருங்கற்கள் வகையான பெங்களூரு வெள்ளை கற்கள், காஞ்சிபுரம் கோவில் பிரகாரங்களின் தளங்களை அலங்கரிக்கின்றன.
வாலாஜாபாத் அடுத்த, பட்டுமலைகுப்பம் என, அழைக்கப்படும் சங்கராபுரம் கிராமம் உள்ளது. இங்கு, மலை கற்களை கொண்டு, சிற்பிகள் சிற்பங்களை வடிக்கின்றனர்.கற்கோவில்களின்
கட்டுமானங்களின் எண்ணிக்கை குறைவால், சிற்பிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சிலர் மட்டுமே, சிலைகளை வடித்து வருகின்றனர்.
சிலர், தோட்டங்களில், சதுர கற்கள் வடிவமைக்கும் தொழிலுக்கு மாறி உள்ளனர். இதற்காக, இடம் பெயர்ந்துள்ளனர்.ஒரு சிலர், குடியிருப்புகளின் அருகே, கற்களை, பதிப்பதற்குரிய
செதுக்கும்கடைகளை நடத்தி, பிழைப்பை ஓட்டி வருகின்றனர்.
இது குறித்து, கல் பதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும், தேவரியம்பாக்கத்தைச் சேர்ந்த, வி.ஆறுமுகம் கூறியதாவது:பிரதான கோவில் வளாகங்களில், தல வரிசை கற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதை, புளோரிங் என, கூறுவதும் உண்டு. கோவில் வளாகங் களில், பெங்களூரு வெள்ளை நிற கற்களை பதிக்கிறோம்.இதற்காக அவற்றை வெளியிலிருந்து தருவிக்கிறோம். 1 சதுர அடிக்கு, 140 ரூபாயில் இருந்து, 350 ரூபாய் வரை வசூலிக்கிறோம். மேலும், இருக்கை மற்றும் மேஜை பொருட்களையும் கற்களில்
அலங்கரிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.