பதிவு செய்த நாள்
10
ஜூன்
2019
02:06
ஆத்தூர்: ஆத்தூர், காந்தி நகர் முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆத்தூர், காந்தி நகர் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 2ல், வைகாசி திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் (ஜூன்., 8ல்), பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (ஜூன்., 9ல்) மாலை, 4:00 மணியளவில், 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், தீச்சட்டி எடுத்து வந்தும், விமான அலகுகள் உள்ளிட்ட அலகுகள் குத்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
விழாவில், முத்துமாரியம்மன் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.