பதிவு செய்த நாள்
10
ஜூன்
2019
02:06
சேலம்: சேலத்தில், நேற்று (ஜூன்., 9ல்) நடந்த ஷீரடி சாய்பாபாவின் பாதுகையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் இருந்து சாய்பாபா பாதுகை கொண்டு வரப்பட்டு, சேலம், சாரதா கல்லூரி சாலையில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் பொதுமக்களின் தரிசனத்துக்காக நேற்று (ஜூன்., 9ல்þ காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. நேற்று (ஜூன்., 9ல்)காலை, சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜை, விளக்கு பூஜை, சமண மஞ்சரி பாராயணம், பஜனை பாடல்கள் என, தொடர்ந்து பல்வேறு குழுக்களால் நடத்தப்பட்டது.
பாதுகையை ஆயிரக் கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ததோடு, சாய்பாபாவை வழிபட்டு அன்னதானத்தில் கலந்து கொண்டனர். இரவில் ஆரத்தி, மஹாதீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சேலம் ஷீரடி சாய் நண்பர்கள் குழுவினர் செய்து இருந்தனர்.