நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2019 02:06
நெல்லிக்குப்பம்:திருக்கண்டேஸ்வரம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடந்தது. கடந்த 5ம் தேதி அர்ஜூனன் திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. கடந்த 7ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை அர்ஜூனன் சமேதராய் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பூசாரிகள் கண்ணன்,சிவக்குமார் முதலில் பூங்கரகத்துடன் தீ மிதித்தனர்.