கண்டாச்சிபுரம் வீரங்கிபுரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2019 02:06
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதனையொட்டி, நாளை 12ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. அதன்பின் சுவாமிகள் கரிக்கோல ஊர்வலமும், 13ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடைபெற உள்ளது.தொடர்ந்து 14ம் தேதி காலை 9:30 மணிக்கு ஞான விநாயகர், லட்சுமி விநாயகர் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை வீரங்கிபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.