மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் 37ம் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2019 02:06
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ராமசாமி நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவில், 37ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம், 28ம் தேதி பூச்சாட்டதலுடன் துவங்கியது. நேற்று முன் தினம் (ஜூன்., 11ல்) இரவு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பு நடந்தது.
அதைத் தொடர்ந்து நேற்று (ஜூன்., 10ல்) அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இன்று (ஜூன்., 12ல்) ராமசாமி நகர் விநாயகர் கோவிலிலிருந்து மாவிளக்கு எடுத்து வருதல், நாளை (ஜூன்., 13ல்) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.