சிவகாசி: திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி திருத்தங்கல் அப்பன், செங்கமல தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர் கலந்து கொண்டனர். 13 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் , சிம்ம வாகனம், சேச வாகனம் , கருட வாகனம், குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 5 ம் நாள் விழாவில் காலையில் மங்களாசாசனம், இரவில் அப்பன் ரெங்கநாதர் கருட வாகனத்திலும், தயார் அன்ன வாகனத்திலும் ஊர்வலம் செல்வர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9 ம் நாள் விழாவில் தேரோட்டம் நடக்கிறது.