பதிவு செய்த நாள்
14
ஜூன்
2019
02:06
நெட்டப்பாக்கம்: சிவன்படைபேட்டை அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஜூன்., 14ல்) காலை 9.௦௦ மணிக்கு நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்த சிவன்படைபேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், சுந்தர விநாயகர், அங்காளம்மன், பாவாடைராயன் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா இன்று (14ம் தேதி) காலை 9.00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் (12ம் தேதி) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.நேற்று (13ம் தேதி) காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, யாகசாலை ஹோமம், மூர்த்திகள் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. இன்று (14ம் தேதி) காலை 5.00 மணிக்கு நான்காம் கால பூஜை, 8.00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9.00 மணிக்கு மூலவர் அங்காளம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.