மங்கலம்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2019 02:06
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 13ல்) நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் (12ம் தேதி) காலை 9:30 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று (13ம் தேதி) கும்பாபிஷேகத்தை யொட்டி, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 8:30 மணிக்கு மஹா தீபாராதனை, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.