சிங்கம்புணரி:ஏரியூர் மேலையான்பட்டி ஆண்டி பாலகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேகம் மூன்று நாட்கள் தொடர்ந்து ஆறுகால பூஜையுடன் நடந்தது. நேற்று (ஜூன்., 14ல்) காலை 11:00 மணிக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கோயிலை வலம் வந்து , கோபுரத்தில் உள்ள கலசங்களில்ஊற்றப்பட்டது.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏரியூர் அருகேயுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.