பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
03:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பெத்தனப்பள்ளி செலையான்கொட்டாய் கிராமத்தில், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் (ஜூன்., 13ல்) துவங்கியது. மங்களவாத்தியம், கங்கை பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கங்கணம்
கட்டுதல், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் ஆகியவை நடந்தது. நேற்று (ஜூன்., 14ல்) காலை, 5:30 மணிக்கு கணபதி பூஜை, வேதபாரா யணம், கணபதி ஹோமம் ஆகியவை நடந்தது. 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு பூஜை செய்தனர். பெத்தனப்பள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர்.