பதிவு செய்த நாள்
18
ஜூன்
2019
03:06
ஸ்லோகம்
அத்வஷே்டா ஸர்வ பூதாநாம்
மைத்ர: கருண ஏவ ச!
நிர்மமோ நிரஹங்கார:
ஸமது: கஸுக: க்ஷமீ!!
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ
யதாத்மா த்ருடநிஸ்சய:!
மய்யர்பிதமநோ புத்திர்
யோமத் பக்த ஸ மே ப்ரிய:!!
பொருள்: எல்லா உயிர்களையும் நேசித்தல், சுயநலம் இல்லாமை, வெறுப்பு இன்மை, காரணம் இன்றி இரக்க சிந்தனை வெளிப்படுதல், தற்பெருமை கொள்ளாமை, நான், எனது என்னும் எண்ணம் இல்லாதிருத்தல், இன்ப, துன்பத்தை சமமாக கருதுதல், பொறுமை, பிறரது குற்றத்தையும் மன்னித்தல், எளியவருக்கு அடைக்கலம் அளித்தல், யோகியாக வாழ்தல், இருப்பதில் திருப்தி கொள்ளுதல், மனம், புலன்கள் சுய கட்டுப்பாட்டில் இருத்தல், கிருஷ்ணராகிய என்னை திடமாக நம்புதல், மனம், புத்தியை என்னிடம் அர்ப்பணித்தல். இவையே எனக்கு பிரியமான பக்தனுக்குரிய நற்பண்புகளாகும்.