பொம்மதேவர் கோவில் திருவிழா பாரம்பரிய முறையில் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2012 11:03
கூடலூர்:முதுமலை புலிகள் காப்பகம் மாண்டக்கரை பொம்மதேவர் கோவில் திருவிழா பாரம்பரிய முறைபடி நேற்று துவங்கியது.முதுமலை கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாண்டக்கரை பொம்மதேவர் கோவில் மிக பழமையானது. இக்கோவில் திருவிழாவை ஆண்டுதோறும் மவுண்டாடன் செட்டி மற்றும் ஆதிவாசியின மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டுக்கான 2 நாள் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியில், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அமீர்ஹாஜா, வனச்சரகர் புஷ்பாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். காலை 7.20 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 8.00 மணிக்கு பூஜை, பூங்கொத்து எடுத்து வருவதற்காக கோவிலில் இருந்து புறப்பாடு நடந்தது. பின்பு ஸ்ரீமதுரை அருகே செருமுல்லி பகுதியில் சிறப்பு பூஜையும், அருள் வாக்கு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து தென்னை மரத்தலிருந்து இளநீர், தென்னங்கொலை, பாக்குப்பூ சேகரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பூஜை பொருள்கள் அனைத்தும் மேல தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மாலை 6.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இரண்டாம் நாளான இன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை 9.00 மணிக்கு பொம்மதேவர் தேவதை அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.00 மணிக்கு சிவனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து அம்மனுக்கு ஆடு, கோழி வெட்டுதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி, விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.