பதிவு செய்த நாள்
19
மார்
2012
11:03
ஊட்டி:ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 23ம் தேதி துவங்கி ஒரு மாத காலம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.ஊட்டி மாரியம்மன் கோவிலில் மாரி, காளி, காட்டேரி அம்மனாக ஆதிபராசக்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலில் இந்த ஆண்டு திருவிழா வரும் 23ம் தேதி காலை 9.30 மணிக்கு பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்குகிறது.24ம் தேதி காலை 7.00 மணிக்கு நீலகிரி மாவட்ட சவுந்தர்ய லஹரி பஜா குழுவினர் சார்பில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடக்கின்றன. 25ம் தேதி காப்பு கட்டு நடக்கிறது. 26ம் தேதியில் இருந்து ஏப்ரல் 16ம் தேதி வரை பல்வேறு உபயதாரர்கள் சார்பில் அம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 26ம் தேதி புலி வாகனத்தில் ஆதிபராசக்தி, 27ம் தேதி ரதம் வாகனத்தில் துர்க்கை, 28ம் தேதி கேடயம் வாகனத்தில் பராசக்தி, 29ம் தேதி கமல வாகனத்தில் காமாட்சியம்மன், 30ம் தேதி சேஷ வாகனத்தில் ஆதிபராசக்தி, 31ம் தேதி கேடயம் வாகனத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். ஏப்ரல் 1ம் தேதி கேடயம் வாகனத்தில் தேவி கருமாரியம்மன், 2ம் தேதி ரதம் வாகனத்தில் மீனாட்சியம்மன், 3ம் தேதி கேடயம் வாகனத்தில் சரஸ்வதி, 4ம் தேதி கேடயம் வாகனத்தில் புவனேஸ்வரி, 5ம் தேதி பூப்பல்லக்கில் அபிராமிசுந்தரி, 6ம் தேதி ரதம் வாகனத்தில் ராஜராஜேஸ்வரி, 7ம் தேதி கேடயம் வாகனத்தில் மகாலட்சுமி, 8ம் தேதி அன்ன வாகனத்தில் மூகாம்பிகை, 9ம் தேதி காமதேனுவில் ஹெத்தையம்மன், 10ம் தேதி சேஷ வாகனத்தில் வடிவாம்பிகை, 11ம் தேதி சிம்ம வாகனத்தில் திரிசூல நாயகி, 12ம் தேதி பூத வாகனத்தில் திருவளர் நாயகி, 13ம் தேதி சிம்ம வாகனத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி, 14ம் தேதி காளை வாகனத்தில் தையல் நாயகி, 15ம் தேதி வேப்பிலை ரதத்தில் மகாமாரி, 16ம் தேதி குதிரை வாகனத்தில் பகவதி அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலா வருகிறார். 17ம் தேதி திருத்தேர் உற்சவம் நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. 18ம் தேதி வெள்ளை குதிரை அலங்காரத்தில் நீலாம்பிகை மஞ்சள் நீராட்டு விழா, 19ம் தேதி கண்ணாடி பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 20ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நாகராஜ், கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.