Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் அர்ச்சுனன் தபசு மரம் ... காஞ்சி அத்தி வரதர் வைபவம்: ரூ. 500 டிக்கெட் பெற ’ஆன்லைன்’ முகவரி வெளியீடு காஞ்சி அத்தி வரதர் வைபவம்: ரூ. 500 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் மலை தீர்த்த குளத்தை தூர்வார கோரிக்கை
எழுத்தின் அளவு:
திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் மலை தீர்த்த குளத்தை தூர்வார கோரிக்கை

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
03:06

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் மலை
அடிவாரத்தில் உள்ள புனித தீர்த்த குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு
வரவேண்டும்.

சிவகங்கை அருகே திருமலை பகுதியை 11ம் நூற்றாண்டில் சோழ மன்னனர் முதலாம்
ராஜேந்திரன், பாண்டியரிடமிருந்து கைப்பற்றினார். 12ம் நூற்றாண்டில் பாண்டிய வம்சத்தில் இருந்து வந்த ஜடாவர்ம குலசேகரன் சோழ மன்னனை வென்றார். சிவ பக்தரான ஜடாவர்ம குலசேகரன் வெற்றிக்கு காணிக்கையாக திருமலையில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலை கட்டினார். இந்த மலையில் கி.பி., 2ம் நூற்றாண்டில் இருந்த தமிழ் பிராமி கல்வெட்டு, குன்று களில் பழந்தமிழர்களின் வரலாறு சொல்லும் ஓவியம், சமணர் படுக்கைகள் வரலாறு சிறப்பை காட்டி நிற்கின்றன. இச்சிறப்பு பெற்ற மலையில் அரசு 84 லட்ச ரூபாயில் படிக்கட்டுகள், தார்ரோடு, கிரிவல பாதை அமைத்து கொடுத்துள்ளது.

2 ஏக்கரில் புனித தீர்த்த குளம்

இங்கு பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ காலங்களில் நடக்கும் பூஜைக்காக
ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள புனிதத் தீர்த்த குளத்தில் நீராடி, சுவாமியை தரிசனம் செய்வர். இதற்காக 2 ஏக்கரில் தீர்த்த குளம் உள்ளது. இக்குளம் தூர்வாரி பல ஆண்டு ஆகிவிட்டது. மேலும் மழை பொய்த்ததால் தீர்த்த குளம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இங்கு செல்லும் பக்தர்கள் குளத்தில் நீரின்றி புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களின் வசதிக்கென புனித தீர்த்த குளத்தை தூர்வாரி, மழை நீர் சேகரமாக உரிய பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

5 மீட்டர் ஆழத்தில் சகதி கழிவு

திருமலையை சேர்ந்த அய்யனார் கூறியதாவது: திருமலை மலை மீது விழும் மழை நீரை
அப்படியே சேகரித்து புனித தீர்த்த குளத்தில் சேகரிக்கும் விதத்தில், கிராமத்தினர். சார்
பில் மழை நீர் வரும் வரத்து கால்வாய்களை தூர்வாரி வைத்துவிட்டோம். தீர்த்த குளம்
10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால், 5 மீட்டர் ஆழத்திற்கு குளத்தில் சகதியும், கழிவும் தேங்கி கிடக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தேவஸ்தான நிர்வாகமும், இணைந்து, இப்புனித தீர்த்த குளத்தை தூர்வாரி, மழை நீரை குளத்தில் சேகரிக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar