சிவகாசி பேருந்து நிலையத்தையொட்டியுள்ளது காசி விஸ்வநாதர் கோயில். அடிக்கடி விமானப்பயணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவராக இக்கோயில் இறைவன் விளங்குகிறார். இக்கோயிலைக் கட்டிய பராங்குச மன்னன் தன் தவ வலிமையால் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். தினமும் ஆகாய மார்க்கமாகச் சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு, சிவகாசியிலும் இறங்கி காசி லிங்கத்தை வழிபட்டுச் செல்வது வழக்கம். எனவே விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் சிவகாசி காசி விஸ்வநாதரை 11 வாரம் தரிசிப்பதன் மூலம் பாதுகாப்பான பயணம் அமைவதாக நம்பிக்கை உள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களும், தொழிலதிபர்களும், காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.