பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 04:07
சிவகங்கை: சிவகங்கை பையூர் பிள்ளை வயல் காளியம்மன் கோயில் 65ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலில் இன்று (ஜூலை 5ல்) காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று மாலை 4:45 மணி முதல் 5:45 மணிக்குள் அம்மன் சன்னதியிலிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் சென்று பூக்கரகம் கட்டி பூக்கரகத்துடன் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து அம்மன் சன்னதி முன் பூக்குழி இறங்குதல் நடக்கிறது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கும். ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு பாலாபி ஷேகம், அலங்காரம், நெய்வேத்தியங்களும் நடக்கும். மாலை 4:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அன்னை பிள்ளைவயல் காளியம்மன் குழந்தையுடன் அருள் பாலிப்பார். தொடர்ந்து பூச் சொரிதல் விழா நடக்கும். விழாவை முன்னிட்டு பொங்கல் வைத்தல், மா விளக்கு ஏற்றுதல், பிள்ளை தொட்டி கட்டுதல், முடி இறக்குதல், போன்ற வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும்.