பதிவு செய்த நாள்
06
ஜூலை
2019
12:07
பல்லடம்: பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில், 19ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீகணபதி ஹோமம், நவகிரக ஹோமங்களுடன், விழா துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, அபிஷேக பூஜை நடந்தது. சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாக்குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.