மதுரை,மதுரையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழா ஜூலை 24 முதல் ஆக.,4 வரை நடக்கிறது.
ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு சிறப்பு தீர்த்தமாடுதல் புட்டுத்தோப்பு வைகை ஆற்றில் நடக்கிறது.விழாக்குழு தலைவர் சுவாமி ராமானந்தா கூறியதாவது: வைகை பெருவிழா துவக்க நாளான ஜூலை 24ல் துறவியர் மாநாடு நடக்கிறது. இதற்காக புட்டுத்தோப்பு வைகை கரையில் மாநாடு பந்தல், அன்னதான பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் பங்கேற்போருக்கு அன்னதானம், தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு ஒரு லட்சம் பேர் சிறப்பு தீர்த்தமாடுதல் புட்டுத்தோப்பு வைகை ஆற்றில் நடக்கிறது. 108 கோ பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலை வைகை நதிக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படும். சித்த வைத்தியம், ஆன்மிக புத்தகங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசு பாதுகாப்பு, சூழல் மேம்பாடு குறித்த கலந்துரையாடல் இடம் பெறும். வைகை நதியை பாதுகாக்க அனைவரும் இணயை வேண்டும், என்றார். தொடர்புக்கு 94868 47005.