பதிவு செய்த நாள்
06
ஜூலை
2019
02:07
திருத்தணி : திருவாலங்காடு ஒன்றியம், பொன்பாடி ஊராட்சி, கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள, வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், மஹா கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு, பின், 8ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இன்று (ஜூலை., 6ல்), காலை, 10:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. வரும், 8ம் தேதி காலை, 9:30 மணிக்கு, கலச ஊர்வலம் மற்றும் கோவில் கோபுரத் திற்கு கலசநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. காலை, 11:00 மணிக்கு, வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் இரவு உற்சவர் வீதியுலா நடைபெறுகிறது.