மேலுார்: சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஆனி மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து அதே ஊரில் உள்ள தான் பிறந்த இடத்திற்கு புறப்பட்டார். அங்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இணைகமிஷனர் நடராஜன், பேஸ்கார் திரவியகுமார் செய்திருந்தனர்.