ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அஞ்சல் நாயகி உடனுரை மாயூரநாத சுவாமி திருக்கோயில் ஆனி 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் 16 வரை அபிேஷகத்துடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இதையடுத்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று கொடியேற்றம் நடந்தது. அஞ்சல் நாயகி அம்மன், மாயூரநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவின்போது தினமும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 12 ம் தேதி, தேரோட்டம் 14 ம் தேதி நடைபெறுகிறது.ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் மகேந்திரன் செய்திருந்தனர்.