பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
01:07
மதுரை: நாங்குநேரி வானமாமலை ஜீயருக்கு நேற்று (ஜூலை., 7ல்.,) மதுரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் தனது இருமாத சாதுரமாஸ்ய விரதத்தை ஐதராபாத்தில் கடைபிடிக்கிறார். முன்னதாக தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளுக்கு செல்கிறார். நேற்று (ஜூலை., 7ல்.,)மதுரை ஆண்டாள்புரம் வந்த அவருக்கு, வரவேற்பு கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின் பக்தர்களுக்கு ஜீயர் ஆசி வழங்கினார்.
இதில் கமிட்டி செயலாளர் ரங்கராஜன், பொருளாளர் நம்பிஸ்ரீனிவாசன், மடத்தின் ஏஜன்ட் அப்பாதுரை, குருவித்துறை ரங்கநாத பட்டர், கமிட்டி உறுப்பினர்கள் ராஜகோபால், நம்பி கிருஷ்ணன், சம்பத்குமார், காஞ்சி சங்கரமட தலைவர் ராமசுப்பிரமணியன் பங்கேற்றனர். இன்று (ஜூலை., 8ல்.,) காலை 9:00 மணிக்கு கூடலழகர் கோயிலில் நடைபெறும் மங்களா சாசன நிகழ்ச்சி, 10:00 மணிக்கு அக்ரிணி வளாகத்தில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஜீயர் பங்கேற்கிறார்.