காரியாபட்டி:காரியாபட்டி அச்சங்குளம் பட்டாபிஷேக ராமர் கோயிலில் 16வது ஆண்டு வருஷா பிஷேகம் நடந்தது. கலசாபிஷேகம், ஹோமங்கள், சிறப்பு பூஜைகளுடன் சுவாமி அலங்காரங்கள் செய்யப்பட்டு சம்ரோஷனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ரகுபதி சாஸ்திரிகள் பூஜைகள் செய்தார். மூலஸ்தானத்தில் காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் ராமர் பாதத்தை தாங்கி அவர் திருமுகத்தை காணும் தோற்றம், ராமர் திருக்கரத்தில் உள்ள முத்துமாலையை வேண்டி நிற்பது போன்ற தோற்றம் கொண்ட இரு ஆஞ்சநேயர்கள் இங்குள்ளனர்.