மயிலம் வீடூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2019 02:07
மயிலம்: மயிலம் அடுத்த வீடூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.வீடூர் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன், மாரியம்மன், கங்கையம்மன் ஆகிய கோவில்கள் புதுபிக்கப்பட்டு நேற்று (ஜூலை., 8ல்) காலை கும்பாபிஷேகம் நடந்தது.
இதை முன்னிட்டு கடந்த 5 ம்தேதி காலை 9:00 மணிக்கு கணபதி உள்ளிட்ட பூஜைகளும், மாலை 5;00 மணிக்கு முதல் யாகசாலை பூஜை நடந்தது. 6ம் தேதி அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. தொடர்ந்து நேற்று (ஜூலை., 8ல்) காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை வழிபாடு, 8:30 மணிக்கு கடம் புறப்பாடு பின்னர் மாரியம்மன் கோவிலில் 9:30மாரியம்மன்கோவில் கலசத் திற்கும் 10:00 மணிக்கு திரவுபதி அம்மன், கங்கையம்மன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்ட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சி நடந்தது.