கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 6ம் தேதி காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. நேற்று முன்தினம் 7ம் தேதி காலை 7:30-; - 9:00 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
உபநாச்சியாருடன் வீதி புறப்பாடு, இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.தினசரி காலை 7:00 மணிக்கு பெருமாள், உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம், காலை 10:00 மணி மற்றும் இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக சிறப்பு அலங் காரத்தில் வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்து லட்சுமி, தக்கார் சுபத்ரா, மேலாளர் ஆழ்வார், அர்ச்சகர் தேவநாதன் பட்டர் செய்து வருகின்றனர்.