தேவிபட்டினம்:தேவிபட்டினம் அருகே அரசூர் கண்ணன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர், சுமங்கலி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கும்ப நீர் கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.