கீழக்கரை:-ஏர்வாடி அல்-குத்பு சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் 845ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக் கூடுவிழா ஜூலை 4ல் மவுலீதுடன் துவங்கியது.
ஏர்வாடி தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு விழா முன்னேற்பாடு குறித்த கூட்டம் ஏர்வாடி ஊராட்சி சமுதாயக்கூடத்தில் நேற்று (ஜூலை., 10ல்) காலை நடந்தது.கீழக்கரை டி.எஸ்.பி., முருகேசன் தலைமை வகித்தார். கடலாடி பி.டி.ஓ., மேகலா முன்னிலை வகித்தார். தீயணைப் புத்துறை, மின்வாரியத்துறை, போக்குவரத்துக்கழகம், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறை அலுவலர்கள், ஏர்வாடி தர்கா (பொது மகாசபை) ஹக்தார் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.