பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
12:07
கம்பம்:கம்பம் ஆர்ய வைஸ்யாள் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் காந்திஜி வீதியில் உள்ளது. இது 1919 ம் ஆண்டு காளப்பன் செட்டியாரால் கட்டப்பட்டது.
கோயில் நிர்மாணம் செய்யப்பட்டு 100 ஆண்டுகளாவதை ஒட்டி அச்சமூகத்தினர், நூற்றாண்டு விழா, கோயில் புனரமைப்பு மற்றும் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்தனர்.அதன்படி இந்த கோயிலில் உள்ள கணபதி, முருகன், சிவன், பார்வதி, நந்தீஸ்வரர்,பெருமாள் லட்சுமி தாயார், நவக்கிரகங்கள் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளபிராமி, வைஷ்ணவி, விஷ்ணுதுர்க்கை ஆகிய தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை., 11ல்) நடைபெறுகிறது. அதை முன்னிட்டு முதல் கால பூஜையாக கணபதி ஹோமம், பூர்ணா ஹூதி, தீபாராதனைநடைபெற்றது.
இரண்டாம் நாள் கஜபூஜை, கோ பூஜை, அஸ்வபூஜை நடைபெற்றது. பின்னர் பல்வேறு புண்ணி ய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்களுடன், ஆர்யவைஸ்ய சமூகத்தினர் ஊர்வலமாக வந்தனர். மூன்றாம் காலத்தில் வேதபாராயணம், புண்ணியாகவாஜனம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து நான்கு, ஐந்தாம், ஆறாம் கால யாகபூஜைகள் நடைபெற் றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கன்னிகாபரமேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளியுள்ளார்.இன்று (ஜூலை., 11ல்) அதிகாலை முதல் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு மேல் முதல் 10:30 மணிக்குள் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் சால கோபுரம், விமான கோபுரம் மற்றும் பரிகார சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபி ஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. காந்திஜி வீதியில் மங்கள இசையும்,வேதமந்திரங்களும் முழங்கி வருகிறது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏற்பாடுகளை கம்பம் ஆர்யவைஸ்ய மகாசபா மற்றும் வாசவி மகிளா விபாக் செய்துள்ளனர்.