பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
01:07
கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், நாளை நடக்கும் ஆஷாட ஏகாதசி திருவிழாவில், பக்தர் கள் அனைவரும் கருவறைக்குள் சென்று சுவாமியை வணங்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கரூர் ஜவஹர் பஜார் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவி லில், ஆண்டுதோறும், ஆஷாட ஏகாதசியன்று கருவறைக்குள் சென்று மூலவர் சுவாமியை பக்தர்கள் தொட்டு வணங்கும் முறை நடைமுறையில் உள்ளது.
அதன்படி, ஆஷாட ஏகாதசி நாளான நாளை (ஜூலை., 12ல்), அதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. முன்னதாக, இன்று (ஜூலை., 11ல்) மாலை, 6:00 மணிக்கு, துக்காராம் கொடி புறப் பாடு, அதை தொடர்ந்து, பண்டரிநாதனுக்கு லட்சார்சனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை (ஜூலை., 12ல்) காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கவுள்ள மகோற்சவ விழா வில், பக்தர்கள் கருவறைக்குள் சென்று, சுவாமி பண்டரிநாதன் மூலவரை தொட்டு வணங்கலாம். 13 காலை, சுவாமி நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.