பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
12:07
குளித்தலை: கூடலூர் மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். குளித்தலை அடுத்த, கூடலூரில், மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை., 11ல்)நடக்கிறது. இதை முன்னிட்டு, குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள், பால் குடம், தீர்த்த குடம் எடுத்துக்கொண்டு, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.