பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
01:07
சேலம்: வரும், 17ல், ஆடி பிறப்பையொட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன் கோவிலில், நேற்று, முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. காலை, கணபதி ?ஹாமத்துடன் பூஜை தொடங்கியது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, 51 கிலோ மஞ்சளால், அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, 21 அடி உயர பச்சை பாக்குமரத்துக்கு, மஞ்சள், குங்குமம் பூசி, பூக்கள், மாவிலை தோரணம் சகிதமாக, வேத மந்திரங்கள் ஓதினர். பின், பக்தர்கள் புடைசூழ, கோவில் நுழைவாயில் முன், முகூர்த்தக்கால் நட்டு, கற்பூர தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு, குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. வரும், 23ல், பூச்சாடல், 25ல், கம்பம் நடுதல், 29ல், கொடியேற்றம், ஆக., 6ல், அலகு குத்துதல், சக்தி அழைப்பு, உருளுதண்டம், 7ல், பொங்கல் வைத்தல், 8ல், அம்மன் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். 9ல், தேரோட்டம், 11ல், வண்டி வேடிக்கை, 12ல், சத்தாபரணம், 13ல், வசந்த உற்சவம், 16ல், விடையாற்றி உற்சவம், 21ல், பாவாடை நைவேத்யம், 24ல், நெய் அபி ஷேகம், 25ல், 108 திருவிளக்கு பூஜையுடன், ஆடி திருவிழா நிறைவடையும்.