பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
01:07
கடலாடி: கோயிலுக்கு சென்றவுடன் அனைவரின் கண்களை கவர்ந்து, மனதை ஒருமுகப் படுத்த வைக்கும் ஆற்றல் சர்வ அலங்காரத்தில் காட்சிதரும் உற்ஸவர், மூலவர்களுக்கு உண்டு.
சுவாமி, அம்மன் விக்ரகங்களை தனது மெருகேற்றும் கலைநய உத்தியால்பக்தர்களை மெய்மறந்து தரிசனம் செய்ய வைக்கும் பாங்கு அரிதாகவே அரங்கேறும். கடலாடி குண்டாற் று வேங்கை முனீஸ்வரர் கோயிலில் சர்வ அலங்காரம் செய்து கொண்டிருந்த பிரம்ம மாரீஸ் வர சிவாச்சாரியாரிடம் 29, அலங்கார கலைகள் குறித்து கேட்டோம். இனி அவர் சொல்வதை கேட்போம்.
முதுகுளத்தூர் வடக்கூர் கொன்னயடி விநாயகர் கோயில் தெருவில் வசிக்கிறேன். கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாகசுவாமி, அம்மனுக்கு சர்வ ஒப்பனை அலங்காரம் செய்வதை முழு நேர அர்ப்பணிப்போடு செய்து வருகிறேன்.
பச்சரிசி மாவில் செய்யப்படும் அலங்காரம் 5 மணி நேரமும், சந்தனத்தால் செய்யப்படும் அலங்காரம் 12 மணி நேரமும், கிழங்கு மாவால் செய்யப்படும் அலங்காரம் 36 மணி நேரத்திற் கும் பொலிவாக காட்சியளிக்கும்.
மூலவர் அம்மன் பாரி சுமக்கும் காட்சி, காய்கனிகள் கூடை, பழங்களால் அலங்காரம் என பல வகைகள் உள்ளன. தேவைக்கேற்ப வண்ணப்பொடிகள், வாட்டர் கலர் பெயின்டிங், ஜிகினா, பேப்பர் கலைநயவேலைகள், டிசைன் மாலைகளுடன் வடிவமைக்க வேண்டும். முதுகுளத்தூர் சீனிவாச சிவாச்சாரியாரிடம் இருந்து முறையாக தொழில் கற்றுக்கொண்டேன். களிமண் மூலம் அனைத்து வகையான ஜீவ ராசிகளையும் கைகளால் வடித்தெடுப்பேன். முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் கோயில் விழாக்களில் சுவாமிக்கு அலங்காரம் செய்து வருகிறேன்.
கோயில் கருவறையினுள் திரையை மறைத்து, அலங்காரப்பணிகள் முடிந்தவுடன், நிறைவாக சுவாமிக்கு திருக்கண் திறக்கப்படும். வீதியுலா வரும் உற்ஸவ மூர்த்திகளையும் ஜொலிக்க வைக்கலாம். இறை நினைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் வடிவமைக்கப்படும் அலங்காரத்தி ற்கு ஈடுஇணை கிடையாது, என்றார். தொடர்புக்கு: 99446 24729.