பதிவு செய்த நாள்
14
ஜூலை
2019
12:07
புதுச்சேரி:கொம்பாக்கம் செங்கழுநீரம்மன் கோவிலில் செடல் திருவிழா, வரும் 19ம் தேதிநடக்கிறது.கொம்பாக்கத்தில் அமைந்துள்ள செங்கழுநீரம்மன் கோவிலில் 77ம் ஆண்டு செடல் திருவிழா, கடந்த 11ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.விழாவை முன்னிட்டு, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகளும், அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது. இரவில், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முக்கிய விழாவான செடல் திருவிழா, வரும் 19ம் தேதியன்று நடக்கிறது. அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில், பக்தர்கள் செடல் தரித்து, செண்டை மேளத்துடன் திருத்தேர் உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினரும், விழாக் குழுவினரும் செய்துள்ளனர்.