பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
02:07
மதுரை:”நதிகளை பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே வைகை பெருவிழா நடத்தப்படுகிறது,” என, மதுரையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அலுவலர் ராஜேந்திரன் கூறினார். மதுரையில் ஜூலை் 24 ல் துவங்கும் வைகை பெருவிழா அழைப்பிதழை வெளியிட்டு அவர் பேசியதாவது:
நதிகளை பாதுகாக்க ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு வேண்டும். நதிகளை பாதுகாக்க மக்க ளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், பல்வேறு அமைப்புகள், மக்களுடன் இணைந்து ஜூலை 24 முதல் ஆக.,4 வரை வைகை பெருவிழா நடக்கிறது.ஜூலை 24 துறவியர் மாநாடு, 26 ல் பெண்கள் மாநாடு, 27 பூஜாரிகள் பேரமைப்பு மாநாடு, 28 ஐயப்ப சேவா சமாஜ மாநாடு, 29 வைணவ மாநாடு, 30 சிவனடியார்கள் மாநாடு, 31 பசுவின பாதுகாப்பு மாநாடு, ஆக., 1 முத்தமிழ், இளைஞர் மாநாடு, 2 ல் நதி நீர் பாதுகாப்பு, விவசாயிகள் மாநாடு, 3 ல் சன் மார்க்க, சித்தர்கள் மாநாடு, ஆடிப்பெருக்கு புனித நீராடல், 4 ல் அனைத்து சமுதாய அமைப் புகளின் ஒருங்கிணைப்பு மாநாடு, நிறைவு விழா நடக்கிறது என்றார்.
சுவாமிகள் சிவனந்தா, சுந்தரானந்தா, ராமானந்தா, சிவயோகானந்தா, சித்தர் ராஜகுமார், ஆத்மானந்தா, வேதாந்த ஆனந்தா, விழா குழு நிர்வாகி ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.