ஒரு பணக்காரர் வெளியூர் சென்று நீண்ட நாள் தங்க வேண்டியிருந்தது. தன்னிடமிருந்த பொற்காசுகளை வீட்டில் இருந்த மூன்று பணியாளர்களிடம் ஒப்படைத்தார். முதல் பணியாளரிடம் ஐந்து, இன்னொருவரிடம் இரண்டு, மூன்றாமவரிடம் ஒரு காசு கொடுத்துச் சென்றார்.
முதல் பணியாளர் அதை வியாபாரத்தில் முதலீடு செய்து பத்து காசுகளாக பெருக்கினார். இன்னொருவர் இரண்டை நான்காக ஆக்கினார். மூன்றாமவர் மட்டும் “இந்த முதலாளி கஞ்சன்” என்று காசை புதைத்தார். சில ஆண்டுகள் கழித்து பணக்காரர் ஊர் திரும்பி, பொற்காசுகளை கேட்டார். முதலாமவன் பத்தாகவும், அடுத்தவன் நான்காகவும், மூன்றாமவன் ஒரு காசையும் கொடுத்தான்.
“விசுவாசம் மிக்கவராக நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள். இந்த சோம்பேறியோ என்னைக் கருமி என எண்ணி விட்டான். வட்டிக்கு கொடுத்திருந்தால் கூட ஆதாயம் வந்திருக்கும். அதையும் செய்யவில்லை. எனவே பத்து காசு சம்பாதித்தவனுக்கு அன்பளிப்பாக ஒன்றும், நான்கு காசு தந்தவனுக்கு பதவி உயர்வும் தருகிறேன். சோம்பேறியை இருட்டறையில் தள்ளி தண்டிக்கிறேன்” என்றார்.கிடைத்த பணத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யாமல் மறைத்தால் பாவம் சேரும்.