விருதுநகர் : கோழி கூவத் தொடங்காத அதிகாலையில் ’வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபரா சக்தி அவள்’ என கூம்பு வடிவ ஒலிபெருக்கி பாடத் தொடங்கினால் ஆடி மாதம் பிறந்துவிட்டது என அர்த்தம்.
சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம், இறைவியை நாடி சென்றவர்களுக்கு எல்லாம் கோடி, கோடியாய் நற்பலன்கள் பெருகும் மாதமாகும். தமிழ் வருடத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ணிய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என புராணங்கள் கூறுகின்றன. ஆன்மிகரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினம். கிழமை களில் ’சுக்ர வாரம்’ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை தான். அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று துள்ளித் திரியும் சிங்கத்தின் மேல் ஏறி பவனி வரும் துாயவளாம் அம்பிகையை வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்காரத்தில் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.
பூஜையுடன் கூட்டுப் பிரார்த்தனைஆடி மாதம் முழுவதும் கோயில்களில் பெண்களால் திரு விளக்கு பூஜை நடப்பதுண்டு.பூஜையுடன் கூட்டுப் பிரார்த்தனையும் செய்வார்கள். ஆடி வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கள் வந்து சேரும். ஆடி அமாவாசை அன்று கடல் அல்லது நதியில் நீராடி முன்னோர் களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்தில் உள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் முடிவடையும்.-