ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளிந்திக்கோட்டை மாசாணி அம்மன் கோவில் விழா ஜூலை 8 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ச்சியாக திருவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து நள்ளிரவில் மயான பூஜையும் நடந்தது. பின் விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், காவடி, தீச்சட்டியுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற் றினர். விழாவை முன்னிட்டு இரவில் கலை நிகழ்சிகள் நடந்தது.