பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
03:07
கரூர்: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கரூர், ஜவஹர் பஜார் மாரியம்மன் கோவில், ஊரணி காளியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், காந்திகிராமம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவிலில்களில் காலை, 5:00 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் சிறப்பான முறையில் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. தரிசனத்திற்கு பின் கோவில் முன் பக்தர்களுக்கு கூழ், நீர்மோர் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.