பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
03:07
ஆடி முதல் வெள்ளியை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில், அம்மன் கோவில்களில், சிறப்பு வழி பாடு நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதமாகும். இதில் வெள்ளிக்கிழமை கூடுதல் சிறப்பு பெறுகிறது. இந்நிலையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, (ஜூலை., 19ல்)ஈரோடு பெரியமாரியம்மன், சின்ன மரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், வலசு மாரியம்மன், சத்திரம் மாரியம்மன், கொங்கலம்மமன் கோவில், கோட்டை பத்ரகாளியம்மன், கள்ளுக்கடை மேடு காளியம்மன், திருவள்ளுவர் வீதி பெட்டு அம்மன் கோவில் உள்பட, மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், ஊத்துக்குழி அம்மன், ஆதிபராசக்தி அம்மன், மற்றும் சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஊத்துக்குளி அம்மன் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாரியம்மன் தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், வேம்பத்தி சொக்கநாச்சியம்மன் கோவில், பவானி சவுடேஸ்வரி அம்மன் கோவில் உட்பட, அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலையி லேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்கார த்தில், அந்தியூர் பத்ரகாளியம்மன், காட்சியளித்தார்.
* பண்ணாரி மாரியம்மன் கோவிலில், அதிகாலை முதலே, பக்தர்கள் வரத் தொடங்கினர். விளக்கேற்றி அங்கபிரதட்சணம் செய்து, பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சத்தியில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
* பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டத்தில் தீபமேற்றி பெண்கள் வழிபட்ட னர். கோபி சாரதா மாரியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், பச்ச மலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இவற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால், அம்மன் கோவில்கள் களை கட்டின.