பதிவு செய்த நாள்
23
மார்
2012
11:03
சென்னை : "பேவு பெல்லா உணவுச் சுடையுடன் தெலுங்கு புத்தாண்டு இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஆந்திராவை அடுத்து தமிழகத்தில் அதிகளவில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் உள்ளனர். உகாதி தெலுங்கு மொழி பேசுபவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. எனவே, இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.தெலுங்கை தாய்மொழியாக கொண்டோர் அதிகாலையில் எண்ணெய் குளியல் முடித்து, புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதிலிருந்து புத்தாண்டு ஆரம்பிக்கிறது. சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு கலை, இசை மற்றும் விருது நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புரோகிதர்களால், பஞ்சாங்க பதனமும் தெலுங்கு புத்தாண்டில் தான் எழுதப்படுகிறது. உகாதி பச்சடி உகாதியன்று அறுசுவையில் உகாதி பச்சடி உணவு செய்யப்படுகிறது. இது வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. புத்தாண்டு மகிழ்ச்சி, துக்கம் அனைத்தும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்த உணவை கன்னட மொழியில் "பேவு பெல்லா என அழைக்கின்றனர்.தமிழகத்தில் உகாதிதமிழகத்தில் உகாதி, தமிழகத்தை தாயகமாக கொண்ட தெலுங்கு பேசுபவராலும், ஆந்திராவிலிருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும் உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்யாமலிருந்தாலும், இனிப்பு வகைகள் போன்றவற்றை செய்து வீடுகள் மற்றும் கோவிலிருக்கும் சுவாமிகளுக்கு வழிபாடு நடத்தி தெலுங்கு புத்தாண்டை கொண்டாடுகின்றனர். பின், குடும்பம் குடும்பமாக உறவினர்கள் வீடுகளுக்கு சென்று, பெரியவர்களிடம் ஆசி பெறுகின்றனர்.