நாமக்கல்: ரெட்டிப்பட்டி கங்கா நகர், ஓம் சித்தி விநாயகர் சன்னிதானத்தில், இன்று (23ம் தேதி) யுகாதி சிறப்பு பூஜை நடக்க உள்ளது. நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டி கங்காநகரில் உள்ள ஓம் சித்தி விநாயகர் சன்னிதானத்தில் இன்று மாலை யுகாதியை முன்னிட்டு, சங்கரய்யர் சுவாமிகள் தலைமையில் விஷேச பூஜைகள் நடக்க உள்ளது. பொருள் பாக்கியம், நிதி கணபதி பூஜை உள்ளிட்ட விஷேச பூஜைகள் நடக்க உள்ளது. பூஜையில் கலந்து கொள்ளும் ஆண்கள், குழந்தைகளுக்கு சுவாமிகள் ஆசிர்வதித்த சக்தி கயிறு, பெண்களுக்கு திருமாங்கல்ய சரடும் வழங்கப்படுகிறது. பூஜையில் அனைவரும் பங்கேற்று அருள் பெற்றுச் செல்லும்படி சன்னிதானத்தினர் தெரிவித்துள்ளனர்.