ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது.பஞ்சபூத திருத்தலங்களில் நீர் தலமாக போற்றி புகழப்படும் திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று தேரோட்டம் நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு பங்குனி தேரோட்ட விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகின்றது. நாள்தோறும் ஸ்வாமி அம்மன் புறப்பாடு கோவில் நான்காம் பிரகாரத்தில் நடந்து வருகின்றது. முக்கிய விழாவான இன்று தேரோட்டம் நடந்தது. ஸ்வாமி அம்மனுக்கு விசேஷ பூஜைகளுக்கு பிறகு தேரில் எழுந்தருள்கின்றார். காலை 7.30 மணிக்கு தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுக்கின்றனர். பாதுகாப்பான ஏற்பாடுகளை போலீஸார் செய்து வருகின்றனர்.